ADDED : செப் 03, 2025 01:10 AM
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 850 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 21௧ ரூபாய் முதல், 222.22 ரூபாய்; இரண்டாம் தரம், 150.89 முதல், 212.36 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 38,917 கிலோ கொப்பரை, 82 லட்சத்து, 24,808 ரூபாய்க்கு ஏலம் போனது.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 23,926 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 55.45 முதல், 63.45 ரூபாய் வரை, 8,487 கிலோ தேங்காய், 5.௨௨ லட்சம் ரூபாய்க்கு விலை போனது. கொப்பரை தேங்காய், 630 மூட்டை வரத்தாகி முதல் தரம் கிலோ, 215.71 முதல், 221.36 ரூபாய்; இரண்டாம் தரம், 154.49 முதல், 220.86 ரூபாய் வரை. 30,821 கிலோ கொப்பரை தேங்காய், 64 லட்சத்து, 68,896 ரூபாய்க்கு விற்பனையானது.
* ஈரோட்டில் நடந்த ஜவுளி சந்தையில், ஓணம் விற்பனை நேற்று களை கட்டியது. ஓணத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், கேரளத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தில் ஓணம் கொண்டாடுவோர், அதிக ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். தவிர கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில வியாபாரிகள், கடைக்காரர்கள், மக்கள் ஜவுளி வாங்கினர். மொத்த விற்பனையை விட சில்லறை விற்பனை அதிகமாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த பாக்கு (உலர்ந்தது) ஏலத்தில், குறைந்த விலை கிலோ, 130 ரூபாய், அதிகவிலை, 191 ரூபாய்க்கு விற்றது. பாக்கு பழம் கிலோ, 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 3,220 கிலோ பாக்கு, 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.