ADDED : செப் 23, 2025 01:43 AM
* ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 800 கிலோ வரத்தாகி, கிலோ 130 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் கிலோவுக்கு எட்டு ரூபாய் விலை கூடியது. வரத்தான அனைத்து தென்னங்கருப்பட்டியும், 1.04 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூரில் நேற்று கூடிய வெற்றிலை சந்தைக்கு, 80 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி வெற்றிலை சிறியது ஒரு கட்டு, 15 ரூபாய், பெரிய கட்டு, 55-65 ரூபாய்; பீடா வெற்றிலை கட்டு, 30-40 ரூபாய்; செங்காம்பு வெற்றிலை கட்டு, 5-15 ரூபாய் வரை, 3 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 95,000 தேங்காய் வரத்தானது. கருப்பு தேங்காய் கிலோ, 65.91 - 7௩ ரூபாய், பச்சை காய், 56.45 - 66.75 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 10௩ ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 36,641 கிலோ தேங்காய், 25 லட்சத்து, 2௭ ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 10,641 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 62.05 - 7௧ ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 4,199 கிலோ தேங்காய், 2.௮௫ லட்சம் ரூபாய்க்கு விலை போனது. கொப்பரை தேங்காய், 355 மூட்டைகள் வரத்தாகி முதல் தரம் கிலோ, 226.49 - 233.50 ரூபாய், இரண்டாம் தரம், 14௪-227.61 ரூபாய் என, 16,557 கிலோ கொப்பரை தேங்காய், 34.௮௪ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 1,198 கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 229.10 ரூபாய், குறைந்தபட்சம் கிலோ, 190.75 ரூபாய்க்கும் ஏலம் போனது.