sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உள்ளூர் வர்த்தக செய்திகள்

/

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : மார் 06, 2026 04:29 AM

Google News

ADDED : மார் 06, 2026 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 43 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ நிலக்கடலை, 90.53 - 100.09 ரூபாய் என, 1,264 கிலோ நிலக்கடலை, 1.22 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

* புஞ்சை காளமங்கலம் உப விற்பனை கூடத்துக்கு, 4,000 தேங்காய்ள் வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 34.15 - 42.39 ரூபாய், பச்சை தேங்காய், 30.29 - 35.25 ரூபாய் என, 1,416 கிலோ தேங்காய், 57,491 ரூபாய்க்கு

விற்பனையானது.

* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. 20 மூட்டை வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 156.19 ரூபாய், குறைந்தபட்சம், 132 ரூபாய் என, 7.04 குவிண்டால், ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம்

போனது.

* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளை விவசாயிகள் அழைத்து வந்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்கி சென்றனர். 6,000 - 23,000 ரூபாய்க்கு, 50 கன்றுகள், 23,000 - 70,000 ரூபாய்க்கு, 200 எருமை மாடுகள், 23,000 - 85,000 ரூபாய்க்கு, 250 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் முற்றிலுமான கலப்பின மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

வரத்தான மாடுகளில், 90 சதவீத மாடுகள் விற்பனையானது.






      Dinamalar
      Follow us