ADDED : மார் 06, 2026 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் பாரதியார் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கணித மேதை ராமானுஜம் கணித மன்றம் சார்பில், கணித கண்காட்சி நேற்று நடந்தது.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியன், சுமதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் பள்ளியை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கணிதத்தில் படைப்புகளை உருவாக்கி காட்சிக்கு வைத்தனர்.
எட்டாம் வகுப்பு மாணவி உருவாக்கிய கணித மென்பொருள் செயலி சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டு பாராட்டுகளை பெற்றது. கணிதத்தை கொண்டு தனது திறமைகளை காட்சிபடுத்திய மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

