ADDED : டிச 14, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மூன்றா-வது கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன் தலைமை வகித்தார். சார்பு நீதிபதி சக்திவேல், ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜன், உரி-மையியல் நீதிபதி பாண்டி மகாராஜா, குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதில், 214 குற்றவியல் சிறு வழக்கு, ஆறு காசோலை மோசடி வழக்கு, மூன்று ஜீவனாம்ச வழக்கு என, 223 வழக்குகளுக்கு, 53.11 லட்சம் ரூபாய் மதிப்பில் தீர்வு காணப்பட்டது. நான்கு வாராக்கடன் வங்கி வழக்குகளுக்கு, 12.65 லட்சம் ரூபாய் மதிப்பில் தீர்வு கிடைத்தது.

