/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாரி டிரைவர் கொன்று புதைப்பு சத்தியில் வாலிபர் கைது; கூலிப்படைக்கு வலை
/
லாரி டிரைவர் கொன்று புதைப்பு சத்தியில் வாலிபர் கைது; கூலிப்படைக்கு வலை
லாரி டிரைவர் கொன்று புதைப்பு சத்தியில் வாலிபர் கைது; கூலிப்படைக்கு வலை
லாரி டிரைவர் கொன்று புதைப்பு சத்தியில் வாலிபர் கைது; கூலிப்படைக்கு வலை
ADDED : மார் 20, 2024 02:22 AM
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம், வடக்கு பேட்டை ராமர் கோவில் வீதியை சேர்ந்தர் விக்னேஷ், 31, லாரி டிரைவர். கடந்த பிப்., 25ம் தேதி முதல் காணவில்லை என்று, தந்தை நாகராஜ், சத்தியமங்கலம் போலீசில் மார்ச், 15ல் புகாரளித்தார். தனிப்படை அமைத்து போலீசார் தேடினர்.
இந்நிலையில் சத்தியமங்கலம், பாரஸ்ட் டிப்போ கிழக்கு வீதியை சேர்ந்த சசிகுமார், 31, சத்தி வி.ஏ.ஓ., சபரிவாசனிடம் நேற்று சரணடைந்தார். அவரை போலீசில் வி.ஏ.ஓ., ஒப்படைத்தார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: விக்னேஷ், சசிகுமார் இடையே முன் விரோதம் இருந்தது. இதனால் கூலிப்படையை வைத்து விக்னேசை கழுத்தறுத்து கொன்று, சத்தி-அத்தாணி சாலையில், சுடுகாட்டு பள்ளத்தில் புதைத்துள்ளார். கொலை வழக்கில் தொடர்புடைய தாணு, தேவராஜ், ஜபருல்லா, மோகன்ராஜ், முத்துக்குமார், பிரபாகரன் உட்பட ஏழு பேரை தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.
வடக்குப்பேட்டை பகுதியில் ஓராண்டாக சசிகுமார், வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதை போலீசாரிடம் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், கூலிப்படைக்கு ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து, விக்னேஷை கொலை செய்துள்ளார். இதனிடையே சசிகுமார் தெரிவித்த இடத்தில், பெருந்துறை மருத்துவகல்லுாரி மருத்துவ குழுவினர், தாசில்தார் மாரிமுத்து முன்னிலையில் உடலை தோண்டி எடுத்தனர்.
உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சடலத்தை தோண்டி எடுப்பதை வேடிக்கை பார்க்க நுாற்றுக்கணக்கான மக்கள் திரண்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

