ADDED : டிச 26, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்ட கனிமம் தனி வருவாய் ஆய்வாளர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான குழு, படியூர் சோதனைச்சாவடி பகுதியில் சோதனையில் ஈடுபட்-டனர். அப்போது ஒரு டிப்பர் லாரியில் ஆறு யூனிட் எம்.சாண்ட் கொண்டு வரப்பட்டது.
ஆனால் உரிய அனுமதி இல்லை. இதையடுத்து லாரி உரிமையா-ளரான சசி, 40; டிரைவர் அரச்சலுார் கார்த்தி, 40, மீது காங்-கேயம் போலீசார் வழக்குப்பதிந்து, லாரியை பறிமுதல் செய்-தனர்.

