/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரல் பாதிப்பு காரணமாக ஆண் யானை உயிரிழப்பு
/
ஈரல் பாதிப்பு காரணமாக ஆண் யானை உயிரிழப்பு
ADDED : மே 22, 2025 02:16 AM
அந்தியூர், அந்தியூர் வனச்சரகத்தில், ஈரல் பாதிப்பு காரணமாக ஆண் யானை இறந்தது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனச்சரகத்துக்குட்பட்ட கொம்புதுாக்கியம்மன் கோவில் பீட், மூலப்பாறை என்ற இடத்தில், நேற்று காலை ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக, அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தியூர் ரேஞ்சர் முருகேசன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
சத்தியமங்கலம் வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக்குழுவினர், உடற்கூறு ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின், ஈரல் பாதிப்பு காரணமாக, யானை உணவு உட்கொள்ளாமல் இறந்திருக்கலாம் என, டாக்டர் சதாசிவம் கூறினார். அதன்பின், உயிர் சுழற்சி முறையில், மற்ற வன விலங்குகளின் உணவுக்காக, யானையின் உடல் அப்படியே விடப்பட்டது.