ADDED : மே 08, 2025 01:39 AM
பவானி, பெருந்துறை அடுத்த குளத்துப்பாளையம் காலனி பகுதியில், மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு, அப்பகுதி மக்கள், 20க்கும் மேற்பட்டோர் டாட்டா ஏஸ் வாகனத்தில், நேற்று மாலை தீர்த்தம் எடுப்பதற்காக, தளவாய்பேட்டையில் உள்ள பவானி ஆற்றிற்கு வந்துள்ளனர். அங்கு ஆற்றின் மைய பகுதியில் தர்மலிங்கம், 35, என்பவர் குளித்துள்ளார்.
அப்போது பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட துாண்களுக்கு இடையே, சுழல் போன்று உள்ள இடத்தில் சிக்கி மூழ்கியுள்ளார். அங்கே இருந்த பொதுமக்கள், பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி ஆற்றில் இருந்த நபரை சடலமாக மீட்டனர். அவரது உடலை, உடற்கூறு ஆய்விற்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.