ADDED : நவ 18, 2026 06:56 AM
ஈரோடு:ஈரோடு
கருங்கல்பாளையம் வீரப்பன் வீதியை சேர்ந்தவர் பாலகுமார், 32, டையிங்
மாஸ்டர். இவரின் மனைவி காவியா, 30; தம்பதிக்கு, 10 வயதில் மகள் உள்ளார்.
பாலகுமார் ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் கொண்டிருந்தார்.
இதனாலும், வேறு பிரச்னைகளாலும் மனைவியுடன் அடிக்கடி தகராறு
ஏற்பட்டுள்ளது. இதனால் வெப்படையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, காவியா
சென்று விட்டார். இந்நிலையில் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு,
பைக்கில் நேற்று முன்தினம் இரவு சென்ற பாலகுமார், பைக்கை கரையில்
நிறுத்திவிட்டு, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல்பாளையம் போலீசார் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.தற்கொலை செய்து கொள்வதற்கு முன், சகோதரி
வாசுகியை மொபைல்போனில் தொடர்பு கொண்ட பாலகுமார், 'என்னை எல்லோரும்
பிரிந்து சென்று விட்டார்கள். என் மகளை பார்த்து கொள்' என்று
தெரிவித்துள்ளார்.
