/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பஸ் டிரைவரை தாக்கியவருக்கு சிறை
/
அரசு பஸ் டிரைவரை தாக்கியவருக்கு சிறை
ADDED : ஜூலை 16, 2025 01:19 AM
ஈரோடு, அறச்சலுாரை அடுத்த வடுகபட்டி, கஸ்துாரிபா கிராமத்தை சேர்ந்தவர் குமார் (எ) சிவக்குமார், 41; கடந்த, 13ம் தேதி மாலை வடபழனியில் இருந்து கந்தசாமிபாளையம் செல்லும் வழியில் ஜெயராமபுரத்தில் நின்றிருந்தார். அப்போது காங்கேயம் செல்ல வந்த அரசு பஸ்சை நிறுத்தி, நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து கஸ்துாரிபா கிராமத்தை சேர்ந்த மற்றொரு அரசு பஸ் ஓட்டுனர் ரவியை, 48, மொபைல் போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு சென்ற ரவி, குமாரை கண்டித்து, அரசு பஸ்சை தடுத்து நிறுத்தியது குறித்து கேள்வி எழுப்பி அறிவுரை வழங்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த குமார், அருகில் கிடந்த கம்பியை எடுத்து ரவியை தாக்கியுள்ளார். ரவி புகாரின்படி, அறச்சலுார் போலீசார் குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.