/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்டேஷனில் இருந்து தப்பியவர் சிக்கினார்; தப்பவிட்ட 'அசால்ட்' போலீசாருக்கு சிக்கல்

ADDED : மார் 07, 2025 07:31 AM
ஈரோடு : ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 30; ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே பழைய ரயில்வே ஊழியர் பயன்பாடற்ற குடியிருப்பு பகுதியில் கடந்த, 4ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.
கழுத்து நெறிக்கப்பட்டிருந்ததால் கொலை வழக்காக பதிவு செய்து, சூரம்பட்டி போலீசார் விசாரணையை தொடங்கினர். சந்தேகத்தின் அடிப்படையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பங்கஜ், 22, என்பவரை நேற்று முன்தினம் விசாரிக்க, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வநதனர். ஆனால் ஆசாமி தப்பிவிட்டார். பீதியடைந்த போலீசார் சல்லடை போட்டு தேட தொடங்கினர். இதில் சேலம் மாவட்டம் சங்ககிரி, வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே பங்கஜை சுற்றி வளைத்து பிடித்தனர்.
டவுன் டி.எஸ்.பி., முத்துக்குமரன் தலைமையில் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இவ்விவகாரத்தில் ஏற்கனவே ஒடிசாவை சேர்ந்த ராகுல், ராஜிடம் சூரம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதில் தொடர்புடைய மற்றொரு ராகுலை தேடி வருகின்றனர். விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஆசாமி தப்பிய விவகாரத்தில், பணியில் கவனக்குறைவாக இருந்த போலீசார், துறை ரீதியான தண்டனைக்கு ஆளாவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.