ADDED : டிச 09, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுமுடி: ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், உங்கள் இல்லம் தேடி நாங்கள் என்ற சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை வகித்தார். மொடக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, வட்ட தலைவர் கோபால் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் பாபு வரவேற்றார். இதில் கொடுமுடி வட்டார காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி நேற்று தொடங்கி, 22ம் தேதி வரை கொடுமுடி கிழக்கு வட்டாரம், மேற்கு வட்டாரம், மொடக்குறிச்சி கிழக்கு வட்டாரம், வடக்கு மற்றும் தெற்கு வட்டாரம், சென்னிமலை வடக்கு வட்டார பகுதிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.