/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொ.வே.கூ.கடன் சங்கத்தை பிரிக்க உறுப்பினர்கள் எதிர்ப்பு
/
தொ.வே.கூ.கடன் சங்கத்தை பிரிக்க உறுப்பினர்கள் எதிர்ப்பு
தொ.வே.கூ.கடன் சங்கத்தை பிரிக்க உறுப்பினர்கள் எதிர்ப்பு
தொ.வே.கூ.கடன் சங்கத்தை பிரிக்க உறுப்பினர்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 11, 2025 12:57 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காடபாளையத்தில் உள்ள பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள், விவசாயிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியது:
பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் நல்லமுறையில் செயல்படுகிறது. இச்சங்கத்தை, பிரித்து, கருமாண்டிசெல்லிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் என புதிய சங்கம் அமைக்க, ஓரு தரப்பினர் முயல்கின்றனர். அவ்வாறு பிரித்தால் இச்சங்க செயல்பாட்டு எல்லை குறைந்து நலிவடையும்.
இதற்கு விவசாயிகள், உறுப்பினர்களிடம் கருத்தும் கேட்கவில்லை. இச்சங்கம் கருமாண்டிசெல்லிபாளையம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட காடபாளையத்தில் செயல்படுகிறது. இதனால் அதே இடத்தில் வேறு சங்கம் தேவையில்லை. மேலும் அரசாணை, தகுதி, விதிப்படி புதிய கடன் சங்கங்கள், அதன் எல்லை பகுதியில், 2,000 முதல், 4,950 ஏக்கர் பயிரிடப்படக்கூடிய நிலப்பரப்பு இருக்க வேண்டும். இச்சங்கத்தை பிரித்து புதிய சங்கம் அமைத்தால், 1,832 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. இதிலும் வீடு, விவசாய மற்ற நிலப்பரப்பு, புறம்போக்கு இடமும் உள்ளது. எனவே இச்சங்கத்தை பிரித்து, புதிய சங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு கூறினர்.