sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'3 மாதமாக ஊக்கத்தொகை வழங்கல' ஆவின் மீது பால் உற்பத்தியாளர் வருத்தம்

/

'3 மாதமாக ஊக்கத்தொகை வழங்கல' ஆவின் மீது பால் உற்பத்தியாளர் வருத்தம்

'3 மாதமாக ஊக்கத்தொகை வழங்கல' ஆவின் மீது பால் உற்பத்தியாளர் வருத்தம்

'3 மாதமாக ஊக்கத்தொகை வழங்கல' ஆவின் மீது பால் உற்பத்தியாளர் வருத்தம்


ADDED : அக் 04, 2024 02:52 AM

Google News

ADDED : அக் 04, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ''ஆவின் நிறுவனம் மூன்று மாதமாக ஊக்கத்தொகை வழங்கா-ததால், பால் உற்பத்தியாளர் கடும் நெருக்கடியில் உள்ளனர்,'' என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொரு-ளாளர் முனுசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:தமிழகத்தில், 9,200 ஆரம்ப பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம், 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் தினமும், 30 லட்சம் லிட்டருக்கு மேல் பாலை வழங்கி வருகின்றனர். தொடர் போராட்டத்தால், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு, 3 ரூபாய், ஊக்கத்தொகையை ஆவின் நிறுவனம் வழங்கியது. இந்நி-லையில் மூன்று மாதங்களாக ஆவின் நிர்வாகம், ஊக்கத்தொகை வழங்காமல் இழுத்தடிக்கிறது. ஆவின் கலப்பு தீவன ஆலை செயல்படாத நிலையில், ஒரு மாதமாக கலப்பு தீவனம் நிறுத்தப்-பட்டுள்ளது.

ஆவின் நிர்வாகத்தில் இருந்து வாரம் ஒரு முறை ஆரம்ப சங்கங்க-ளுக்கு, கால்நடை டாக்டர்கள் வந்த நிலையில், உரிய மருந்து இல்லாததால், ஆவின் மருத்துவர்களை பயனில்லை என, தனியார் மருத்துவர்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆவின் நிர்வாகம், ஊக்கத்தொ-கையை உடன் வழங்க வேண்டும். கொள்முதல் விலையை, லிட்-டருக்கு, 10 ரூபாய் வீதம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us