/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்திக்கடவு திட்டத்தில் 71 குளங்களுக்கு நீர் செல்வதில் சிரமம் 20 நாளுக்குள் சீரமைக்க நடவடிக்கை; அமைச்சர் தகவல்
/
அத்திக்கடவு திட்டத்தில் 71 குளங்களுக்கு நீர் செல்வதில் சிரமம் 20 நாளுக்குள் சீரமைக்க நடவடிக்கை; அமைச்சர் தகவல்
அத்திக்கடவு திட்டத்தில் 71 குளங்களுக்கு நீர் செல்வதில் சிரமம் 20 நாளுக்குள் சீரமைக்க நடவடிக்கை; அமைச்சர் தகவல்
அத்திக்கடவு திட்டத்தில் 71 குளங்களுக்கு நீர் செல்வதில் சிரமம் 20 நாளுக்குள் சீரமைக்க நடவடிக்கை; அமைச்சர் தகவல்
ADDED : நவ 23, 2024 03:21 AM
ஈரோடு: ''அத்திக்கடவு திட்டத்தில், 71 குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் உள்ளது. இன்னும், 20 நாளுக்குள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
ஆய்வுக்கு பின், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்த பின், பல்வேறு முறை அத்திட்டத்தை ஆய்வு செய்து வருகிறார். தற்போது, பெரும்பகுதியான பணிகள் சீரமைத்து முடிக்கப்பட்டு மொத்தமுள்ள, 1,045 குளங்களில், 71 குளங்களுக்கு மட்டும் தண்ணீர் சென்றடைவதில் சிரமம் உள்ளது. அதற்கு பைப்லைன் போட்டு முடிக்கப்பட்டது. வேறு காரணத்தால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. பிற குளங்களில், 101 குளங்களுக்கு முழுமையாக தண்ணீர் தேக்கி, நிரம்பி உள்ளது. மற்ற சில குளங்களில் நிரம்பினாலும், நிலத்-தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதால், அளவு குறைந்துள்ளது.
அடுத்த, 15 முதல், 20 நாட்களில், 71 குளங்களுக்கான சீரமைப்பு பணி செய்து, தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உபரி நீர், 250 கனஅடிக்கு மேல் வரும்போதுதான், அந்த தண்ணீரை எடுக்க முடியும். அவ்வாறாக, 54 நாட்கள் இதுவரை தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணி முடிந்-ததும், அனைத்து குளங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்திட்டத்துக்கு இதுவரை, 0.63 டி.எம்.சி., தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது. எத்தனை நாட்கள் என்பது முக்கியமல்ல, அதிகபட்சம், 1.50 டி.எம்.சி., அளவுக்கு நீரை எடுக்கலாம். அத்திக்கடவு திட்டத்தில், 2ம் கட்ட திட்டம் என்ற ஒன்று இல்லை. தற்போதுள்ள குழாய், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பின்படி, 1,045 குளங்க-ளுக்கு தண்ணீரை நிரப்பும்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள திட்டத்தில் கூடுதல் குளங்களை சேர்க்க கோரி வருகின்றனர். தற்போது பயன் பெறும் குளத்தின் அருகே வேறு குளங்கள் இருந்தால், வேறு முயற்சியில் தண்ணீரை அக்குளத்துக்கு வழங்க முடி-யுமா என ஆய்வு செய்கின்றனர். பெருந்துறை சிப்காட்டில், கழிவு நீரை கண்காணிக்க மீட்டர் பொருத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. சிப்காட்டில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில் சில கேள்விகள் எழுப்பப்பட்டதால் வரும் டிச.,9ல் டெண்டர் இறுதி செய்யப்படும்.
இவ்வாறு கூறினார்.