/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனியார் கோவிலுக்கு இடம் வழங்கும் விவகாரம்; அமைச்சர் முத்துசாமி ஆய்வு
/
தனியார் கோவிலுக்கு இடம் வழங்கும் விவகாரம்; அமைச்சர் முத்துசாமி ஆய்வு
தனியார் கோவிலுக்கு இடம் வழங்கும் விவகாரம்; அமைச்சர் முத்துசாமி ஆய்வு
தனியார் கோவிலுக்கு இடம் வழங்கும் விவகாரம்; அமைச்சர் முத்துசாமி ஆய்வு
ADDED : ஜூலை 13, 2025 01:33 AM
ஈரோடு, ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், அற
நிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு பின்புறம் சீரங்க வீதியில் கோவில் தெப்பக்குளம் அமைந்துள்ளது.
இதற்கு எதிரே அறநிலைய துறை இடத்தில், விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் சிலை வைத்து வழிபாடு நடந்து வந்தது.இந்த இடத்தை கோசாலையாக மாற்ற திட்டமிட்டு பின் திட்டம் கைவிடப்பட்டது. இதனால் மீண்டும் சிலைகளை நிறுவி வழிபட முடிவு செய்தனர். இதற்கான முன்னேற்பாடு பணி விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலத்துக்கு அருகில், தனியாருக்கு சொந்தமான கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் பாதை குறுகலாக உள்ளது. இதனால் அறநிலைய துறை இடத்தில் இருந்து 2 அடி நிலம் தருமாறு, தனியார் கோவில் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு அறநிலைய துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தை அமைச்சர் முத்துசாமி நேற்று பார்வையிட்டார். பிறகு தனியார் கோவிலுக்கான பாதையையுயும் பார்வையிட்டு, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதை தொடர்ந்து சிலைகள் அமைக்கும் பணிகளை துவங்க அறநிலைய துறை அதிகாரி களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். அதேசமயம் தனியார் கோவில் நிர்வாகத்தினரிடம், பாதைக்கான வழித்தடம் குறித்து, உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.