/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தியாகி ஈஸ்வரன் பிறந்தநாள் அமைச்சர் முத்துசாமி மரியாதை
/
தியாகி ஈஸ்வரன் பிறந்தநாள் அமைச்சர் முத்துசாமி மரியாதை
தியாகி ஈஸ்வரன் பிறந்தநாள் அமைச்சர் முத்துசாமி மரியாதை
தியாகி ஈஸ்வரன் பிறந்தநாள் அமைச்சர் முத்துசாமி மரியாதை
ADDED : அக் 26, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, கீழ்பவானி பாசன தந்தை என அழைக்கப்படும் தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் பிறந்த நாளை விவசாயிகள், பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். அவரது பிறந்த நாளான நேற்று, ஈரோடு - பெருந்துறை சாலை, வாய்க்கால்மேடு என்ற இடத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள், ஈஸ்வரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசு சார்பில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மரியாதை செலுத்தினார். அங்கு விவசாயிகள் சார்பில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.