/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'வெளிநாட்டில் இருந்து மிரட்டல்'கலப்பு திருமண தம்பதி கதறல்
/
'வெளிநாட்டில் இருந்து மிரட்டல்'கலப்பு திருமண தம்பதி கதறல்
'வெளிநாட்டில் இருந்து மிரட்டல்'கலப்பு திருமண தம்பதி கதறல்
'வெளிநாட்டில் இருந்து மிரட்டல்'கலப்பு திருமண தம்பதி கதறல்
ADDED : ஏப் 22, 2025 01:33 AM
ஈரோடு:ஈரோட்டை சேர்ந்த விக்னேஸ்வரன், தனது காதல் மனைவி சுபஸ்ரீயுடன் வந்து, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காதலித்த சுபஸ்ரீயை கடந்த, ௧௬ல் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். திருமணத்தை தொடர்ந்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸில், எங்கள் கலப்பு திருமண விபரத்தை தெரிவித்து பாதுகாப்பு கேட்டு மனு வழங்கினோம். இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் சமரசம் பேசினர். இதில் என் பெற்றோர் திருமணத்தை ஏற்ற நிலையில், சுபஸ்ரீ பெற்றோர் ஏற்கவில்லை. அப்போது சுபஸ்ரீயை அவரது அக்கா முறை கொண்ட ஒருவர் அடித்தார். இதனால் அவர்களை வெளியே செல்லும்படி போலீசார் கூறிய நிலையில், என் பெற்றோரின் பொறுப்பில் இருவரையும் ஒப்படைத்தனர்.
அதேசமயம் சுபஸ்ரீயின் வீட்டினர், ஸ்டேஷனில் நடந்த பேச்சுவார்த்தையில், எங்களுக்கு எவ்வித இடையூறும் செய்ய மாட்டோம் என எழுதி தர மறுத்துவிட்டனர். கடந்த, 19ம் தேதி முதல் எனது வாட்ஸ் ஆப் கால் மற்றும் வெளிநாட்டு எண்களில் இருந்து மிரட்டல் வருகிறது. தொடர்ந்து இரவில் ஆட்களை காரில் அழைத்து வந்து சுபஸ்ரீயை அழைத்து செல்ல முற்படுகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.