/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உடல் நலக்குறைவுடன் பிறந்த குழந்தை தனியார் மருத்துவமனை மீது தாய் புகார்
/
உடல் நலக்குறைவுடன் பிறந்த குழந்தை தனியார் மருத்துவமனை மீது தாய் புகார்
உடல் நலக்குறைவுடன் பிறந்த குழந்தை தனியார் மருத்துவமனை மீது தாய் புகார்
உடல் நலக்குறைவுடன் பிறந்த குழந்தை தனியார் மருத்துவமனை மீது தாய் புகார்
ADDED : ஜூலை 30, 2025 01:20 AM
ஈரோடு,  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கள்ளிமடைதோட்டத்தை சேர்ந்த பிரபு மனைவி சந்தியா, 28; ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
கடந்த, 2023, ஆக.,20ல் எனக்கும், பிரபுவுக்கும் திருமணம் நடந்தது. கர்ப்பமான நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ஒவ்வொரு முறையும் ஸ்கேன் உட்பட பரிசோதனையில், குழந்தை நன்றாக உள்ளதாக கூறினர்.
பிரசவத்துக்கு திருப்பூரில் எனது தாயார் வீட்டுக்கு சென்று, 2024 மே, 9ல் அங்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு சுவாச பிரச்னை, முதுகு தண்டுவட வீக்கம் என பல பிரச்னை தெரிவித்தனர். தொடர்ந்து கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, 7 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும். கர்ப்பத்திலேயே கவனித்து சிகிச்சை வழங்கியிருந்தால், இப்பிரச்னை வந்திருக்காது என கோவை, திருப்பூர் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி பவானி சூர்யா மருத்துவமனையில் தெரிவித்தபோது சரியான பதில் கிடைக்கவில்லை. டாக்டர்கள் அலட்சியத்தால் நானும் குழந்தையும் சிரமப்படுகிறோம். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சூர்யா மருத்துவமனை டாக்டர் தினேஷ் கூறியதாவது:  கர்ப்பமாக இருந்தபோது, 3 மாதம், 5 மாதம் என உரிய காலத்தில் ஸ்கேன் செய்து, ஸ்கேன் டாக்டர்கள் ஆலோசனையுடன், குழந்தை நன்றாக உள்ளதை தெரிவிக்கிறோம். குறைபாடு இருந்தால், அப்போதே கூறி, சிகிச்சை வழங்கி இருப்போம். 3 மாதத்தில், 300 கிராமில் குழந்தை இருக்கும். அப்போது ஸ்கேனில், மிக நுட்பமாக இருந்தால் கூட கவனித்து சரி செய்திருப்போம். இந்த கேஸில், ஆரம்பத்தில் எக்குறைபாடும் இல்லை.
தற்போது நாங்கள் முன்பே கூறவில்லை என தெரிவித்து சிகிச்சைக்கு, 5 லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்டனர். நாங்கள் தவறு செய்யவில்லை. சரியான முறையில்தான் சிகிச்சை வழங்கினோம். இவ்வாறு கூறினார்.

