/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.7 கோடியில் கட்டிய வணிக வளாகம் வீண் கோபி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
/
ரூ.7 கோடியில் கட்டிய வணிக வளாகம் வீண் கோபி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
ரூ.7 கோடியில் கட்டிய வணிக வளாகம் வீண் கோபி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
ரூ.7 கோடியில் கட்டிய வணிக வளாகம் வீண் கோபி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
ADDED : ஜன 01, 2025 01:19 AM
கோபி, ஜன. 1-
கோபி நகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம், சேர்மன் நாகராஜ், கமிஷனர் சுபாஷினி தலைமையில் நேற்று நடந்தது. வார்டுகளில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை, தெருவிளக்கு வசதி, தெருநாய் தொல்லை, சாக்கடை வசதி உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 13 பேர், வார்டு பிரச்னைகள் குறித்து பேசி முடித்த பிறகு, கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து அ.தி.மு.க., கவுன்சிலர் பிரினியோ கணேஷ் கூறியதாவது: கோபி பெரியார் திடல் எதிரே, பழைய காய்கறி மார்க்கெட் வளாகத்தில், கட்டடம் கட்டப்பட்டது. சமீபத்தில் முதல்வரால் திறப்பு விழா கண்ட கட்டடத்தின் தரைதளத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் கட்டடத்தின் கான்கிரீட் கிரில் கம்பிகள் துருப்பிடித்து, கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிக்கிறது. கட்டடத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்த பிறகே பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். தரைதளத்துக்குள் நுழைய இரு இடங்களில் வழி ஏற்படுத்த, பொது நிதியாக தலா, 39 லட்சம் ரூபாய் கோரியுள்ளனர். பொது நிதியை இப்பணிக்கு பயன்படுத்துவதை கண்டித்தும், கட்டடத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்தபின்பே, பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நகராட்சி கூட்டத்தை புறக்கணித்தோம். இந்த திட்டப்பணி துவங்கியது முதல், நகராட்சியில் கமிஷனர் மற்றும் பொறியாளர் என தலா மூவர் இடம் மாறியுள்ளனர். இத்திட்டத்துக்காக ஏழு கோடி ரூபாய் வீணாகியுள்ளது. இப்பிரச்னைக்கு சேர்மன் தார்மீக பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

