ADDED : ஜூன் 01, 2026 03:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
அருகேயுள்ள 46 புதுார் நொச்சி காட்டு வலசு கம்பன் நகரை சேர்ந்தவர்
கோபால், 58; குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். கடந்த ஏப்.,16ம்
தேதி நள்ளிரவில் இவரது வீட்டு கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் சென்று பிடிக்க முயன்றபோது ஆசாமி தப்பி விட்டார்.
புகாரின்படி
ஈரோடு தாலுகா போலீசார் ஆசாமியை தேடி வந்தனர். இது தொடர்பாக ஈரோடு
கோணவாய்க்கால் மோகன் தோட்டத்தை சேர்ந்த மணிகண்டன், 43, என்பவரை
போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது, 25க்கும் மேற்பட்ட திருட்டு,
வழிப்பறி வழக்குகள் உள்ளதாக தெரிவித்தனர்.
