ADDED : நவ 13, 2024 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்:தாராபுரம்,
பைபாஸ் சாலை அமராவதி புது பாலம் அருகே நேற்று காலை, அடையாளம் தெரியாத
ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. தாராபுரம் போலீசார் உடலை மீட்டு
விசாரித்தனர்.
இதில் கொண்டரசம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ், 54,
என தெரிந்தது. சில நாட்களுக்கு முன், காணாமல் போன புகாரில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேடப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில் அமராவதி ஆற்றோரம் பிணமா கிடந்துள்ளார். சாவுக்கான
காரணம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

