sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.1 கோடி

/

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.1 கோடி

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.1 கோடி

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.1 கோடி


ADDED : ஜன 21, 2025 06:59 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, தனது குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக தெரிவித்-துள்ளார்.

வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்டிருந்த சொத்து விபரம்: தன் பெயரில் டி.வி.எஸ்., ஸ்கூட்டி பெப், ஜூபிடர் ஸ்கூட்டர்; கணவர் செழியன் பெயரில் பஜாஜ் டிஸ்கவர் பைக், சுசிகி மேக்ஸ் பைக், பேட்டரி ஸ்கூட்டர், மாருதி-800 கார், போர்டு பியஸ்டா கார் உள்ளன.தன் பெயரில், 6.30 லட்சம் ரூபாய் மதிப்பில், 100 கிராம் தங்கம்; கணவர் பெயரில், 3.15 லட்சம் ரூபாய் மதிப்பில், 50 கிராம் தங்கம்; மகள் இசைமதி பெயரில், 1.89 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 கிராம் தங்கம் உள்ளன. அசையும்

சொத்தாக தனது பெயரில், 31.52 லட்சம் ரூபாய்; கணவர் பெயரில், 26.65 லட்சம் ரூபாய் ; மகள் பெயரில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலும் உள்ளன.அசையா சொத்தாக தனது பெயரில், 7.50 லட்சம் ரூபாய்; கணவர் பெயரில், 33 லட்சம் ரூபாய் மதிப்பில் நிலம், வீடு உள்ளன. தன் பெயரில், 2.30 லட்சம் ரூபாய்க்கு வங்கி கடன் உள்ளது. மொத்-தத்தில் குடும்பத்தின் அசையும்,

அசையா சொத்துக்கள், வங்கி கணக்குடன் சேர்த்து, 1 கோடியே, 67,000 ஆயிரம் ரூபாய் மதிப்பி-லான சொத்து உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திருச்சி எட-மலைபட்டிபுதுார் போலீஸ், ஈரோடு மாவட்டம் பவானிசாகர்

போலீசில் தலா ஒரு வழக்கு தன் மீது உள்ளதாக, வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us