ADDED : அக் 07, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து தேசிய சமரச தீர்வு
3.0 விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி
சமீனா, கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தனர். சமரச தீர்வு மைய
விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரம் மக்களுக்கு
வழங்கினர்.
விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி
நீதிபதிகள், வக்கீல்கள் என, 300க்கும் மேற்பட்டோர் பேரணியில்
பங்கேற்றனர். சமரச மையம் மூலம் ஒரு சிட்பண்ட்ஸ் மற்றும் தனி
நபருக்குமான வழக்குக்கு தீர்வு கண்டு வழக்கை முடித்து அதற்கான
சான்றிதழ் வழங்கினர்.
