/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
6ம் வகுப்புக்கு நீட் தேர்வு பயிற்சி கட்டணம்? தனியார் பள்ளியில் பெற்றோர்கள் குமுறல்

ADDED : அக் 11, 2024 01:15 AM
6ம் வகுப்புக்கு நீட் தேர்வு பயிற்சி கட்டணம்?தனியார் பள்ளியில் பெற்றோர்கள் குமுறல்
ஈரோடு, அக். 11-
ஈரோடு, கொல்லம்பாளையத்தில், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயல்படுகிறது. இங்கு நீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சி வகுப்புக்கு ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர், ஆண்டுக்கு, ௮,௦௦௦ ரூபாய் செலுத்துமாறு, பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கு நேற்று முன்தினம் பள்ளியில் நடந்த, பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தில், பல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் பள்ளி தாளாளர் பங்கேற்காததால், நாளை அவர் பள்ளிக்கு வருவார் என தெரிவித்துள்ளனர். இதனால், 20க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் நேற்று பள்ளிக்கு வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
ஆறாம் வகுப்பு மாணவர்கள் தற்போதே நீட், ஜே.இ.இ., தேர்வு குறித்து அறிந்து என்ன செய்ய போகின்றனர். பிளஸ் 1 வகுப்பில் கூட சிலர் மட்டுமே இந்த தேர்வுகளை எழுத வாய்ப்புள்ளது. இதற்கு அனைவரிடமும் எப்படி பணம் பெறலாம்? இவ்வாறு அவர்கள் கூறினர். பெற்றோரை பள்ளி நிர்வாகத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுபற்றி மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் கேசவகுமார் கூறும்போது, ''பள்ளியில் பணம் வசூலிப்பது குறித்து எந்த புகாரும் வரவில்லை,'' என்றார்.