ADDED : ஜூன் 06, 2026 04:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், காய்கறி ஏற்றி வரும்
வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக
மாநகராட்சிக்கு புகார் போனது.
இது தொடர்பாக கடந்த, 3ம் தேதி மார்க்கெட்
சங்கங்கள் மற்றும் ஒப்பந்ததாரருடனான பேச்சுவார்த்தை,
மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது இருதரப்பினரிடையே
கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆணையர் அர்பித் ஜெயின் கூட்டத்தை
ரத்து செய்து விட்டார். இரண்டாவது முறையாக நேற்று கூட்டத்துக்கு
அழைப்பு விடுக்கப்ட்டது. ஒப்பந்ததாரர் மற்றும் நேதாஜி சுபாஷ்
சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் மேம்பாட்டு நலச்சங்கத்தினர்
மட்டும் வந்தனர். மற்ற சங்கத்தினர் வராததால் ரத்து செய்யப்பட்டது.
வரும், 9ம் தேதி மீண்டும் நடத்தப்படும் என ஆணையர் அறிவித்தார்.
