/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நேந்திரன் வாழைத்தார் விலை சரிவு பவானிசாகர் விவசாயிகள் வேதனை
/
நேந்திரன் வாழைத்தார் விலை சரிவு பவானிசாகர் விவசாயிகள் வேதனை
நேந்திரன் வாழைத்தார் விலை சரிவு பவானிசாகர் விவசாயிகள் வேதனை
நேந்திரன் வாழைத்தார் விலை சரிவு பவானிசாகர் விவசாயிகள் வேதனை
ADDED : நவ 01, 2024 01:41 AM
புன்செய் புளியம்பட்டி, நவ. 1-
நேந்திரன் வாழைக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
புன்செய் புளியம்பட்டி, பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நேந்திரன், கதளி, ஆந்திரா ரஸ்தாளி, செவ்வாழை, ஜி-9 உள்ளிட்ட ரக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இதில், 60 சதவீதம் நேந்திரன் ரகம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் வாழைத்தார்கள், அதிகளவில் கேரளாவிற்கும், அடுத்தபடியாக மும்பைக்கும் செல்கிறது. கேரளா மார்க்கெட்டை பொறுத்து நேந்திரன் வாழை, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக நல்ல விலை கிடைத்து வருவதால், நேந்திரன் வாழை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். நடப்பாண்டில் பரவலான மழை மற்றும் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால், வாழைத்தார் சாகுபடி அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான அறுவடை துவங்கி நடந்து வருகிறது. துவக்கத்தில், ஓரளவு நல்ல விலை கிடைத்தது. இதனால், நேந்திரன் உற்பத்தி பரவலாக அதிகரித்ததால், விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ, 35 ரூபாய் வரை விற்ற நேந்திரன் தற்போது, 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனையாகிறது.
வாழை வியாபாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு, வாழை கன்றுகள் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது கர்நாடகா மாநிலத்திலும் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ளனர். கேரளாவுக்கு தேவைக்கு அதிகமாக நேந்திரன் வாழைக்காய் செல்வதால், உரிய விலை கிடைப்பதில்லை,' என்றனர்.