/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லோக் ஆயுக்தா அமைக்க கோரி மக்கள் மாநாடு கட்சி ஆர்ப்பாட்டம்
/
லோக் ஆயுக்தா அமைக்க கோரி மக்கள் மாநாடு கட்சி ஆர்ப்பாட்டம்
லோக் ஆயுக்தா அமைக்க கோரி மக்கள் மாநாடு கட்சி ஆர்ப்பாட்டம்
லோக் ஆயுக்தா அமைக்க கோரி மக்கள் மாநாடு கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 28, 2014 04:42 PM
ஈரோடு: தமிழகத்தில், லோக் ஆயுக்தா அமைக்க, மாநில அரசை வலியுறுத்தி, மக்கள் மாநாடு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில மக்கள் நடுவம் (லோக் ஆயுக்தா) அமைத்திட, தமிழக அரசை வலியுறுத்தி, மக்கள் மாநாடு கட்சி சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மண்டல அமைப்பாளர் கண்ணப்பன் தலைமை வகித்தார். மேற்கு சட்டசபை தொகுதி அமைப்பாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சதீஷ்குமார், மாநில இளைஞரணி செயலாளர் பால்ராஜ், மாநில செயலாளர் அன்புகாந்த் ஆகியோர் பேசினர். ஊழல் புரிபவர்களில், சிலர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டால், முதல்வர், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்படும். லோக் ஆயுக்தா அமையும் பட்சத்தில், அனைவரையும் விசாரித்து, உரிய தண்டனை வழங்க இயலும். ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஸ்கர், டில்லி, குஜராத், ஜார்கண்ட் உட்பட சில மாநிலங்களில், லோக் ஆயுக்தா மற்றும் துணை மக்கள் நடுவ அமைப்புகள் உருவாகி உள்ளன. இவை மாநில அளவில், மத்திய அரசு தொடர்பான லோக்பாலின் வேலைகளை செய்து வருகின்றன. எனவே தமிழகத்திலும், லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும், என வலியுறுத்தினர்.