ADDED : ஜன 26, 2024 11:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: தைப்பூச விழாவை ஒட்டி, டி.என்.பாளையம் அருகே கணக்கம்பாளையத்தில், நிலாச்சோறு விழா வழக்கதமான உற்சாசக்துடன் நடந்தது. இதில் விநாயகர் சப்பரத்தை சுற்றி பெண்கள், சிறுமிகள் மற்றும் ஆண்கள், ஜாதி, மத வித்தியாசமின்றி நள்ளிரவு முதல் அதிகாலை வரை கும்மியடித்து பாடல் பாடி மகிழ்ந்தனர்.
* பவானி அடுத்த காலிங்கராயன்பாளையம், என்.எஸ்.கே., வீதியில், நிலாச்சோறு வழிபாடு நடந்தது. இதில் பவுர்ணமி வெளிச்சத்தில் நிலா பிள்ளையாருக்கு மங்களப்பொருட்கள், மாவிளக்கு தட்டு, முளைப்பாரி படைத்தனர். குழந்தைகளை அலங்கரித்து படையலிட்ட இடத்தை சுற்றி கும்மிப்பாடல் பாடி வழிபட்டனர். அதிகாலையில் வாழை மரத் தேரில் பிள்ளையாரை அமர வைத்து ஊர்வலமாக எடுத்துச்சென்று வாய்க்காலில் விட்டனர்.

