/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலை கிராம அரசு பள்ளியில் காலை உணவு கிடைக்கல!
/
மலை கிராம அரசு பள்ளியில் காலை உணவு கிடைக்கல!
ADDED : ஜூலை 26, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், கடம்பூரை அடுத்த குன்றி மலை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, 60 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அரசின் காலை உணவு திட்டம் பள்ளியில் செயல்பாட்டில் உள்ளது. பள்ளி வளாகத்திலேயே சமைத்து வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம் பாதி பேருக்கு உணவு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று காலையும், சமையல் பணியாளர் வராததால், யாருக்கும் உணவு கிடைக்கவில்லை. பள்ளியில் தலைமை ஆசிரியர் இன்னும் பொறுப்பேற்கவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, தடையின்றி காலை உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பள்ளி மேலாண்மை குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.