/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீஸ் ஸ்டேஷனை காலி செய்ய கெடு அவகாசம் முடிந்தும் தீர்வு கிடைக்கவில்லை
/
போலீஸ் ஸ்டேஷனை காலி செய்ய கெடு அவகாசம் முடிந்தும் தீர்வு கிடைக்கவில்லை
போலீஸ் ஸ்டேஷனை காலி செய்ய கெடு அவகாசம் முடிந்தும் தீர்வு கிடைக்கவில்லை
போலீஸ் ஸ்டேஷனை காலி செய்ய கெடு அவகாசம் முடிந்தும் தீர்வு கிடைக்கவில்லை
ADDED : அக் 24, 2024 03:30 AM
ஈரோடு: ஈரோட்டில், ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை காலி செய்ய, ரயில்வே நிர்வாகம் அளித்த அவகாசம் முடிந்தும், உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நான்கு பிளாட்பார்ம்கள் உள்ளன. தினமும், 55 ரயில்கள் ஈரோடு வழியே சென்று வருகின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் பிளாட்பார்ம் 3-4க்கு இடையே ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை நவீனமயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
தற்போது ஸ்டேஷன் நுழைவு பகுதியில் இருந்து மாடிப்படி வழியே பிளாட்பார்ம்கள், 1, 2, 3, 4 மட்டுமின்றி ரயில்வே காலனிக்குள் நேரடியாக செல்லும் வகையில் நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரயில்வே ஸ்டேஷனில் உள்ள சில கட்டடங்கள் இடிக்கப்பட்டு, நவீன வசதிகள் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கட்டடமும் இடித்து அகற்றப்பட உள்ளது.இதுபற்றி, ரயில்வே போலீசார் கூறியதாவது:நடைபாதை மேம்பாலம் அமைப்பதற்காக, போலீஸ் ஸ்டேஷனை காலி செய்து தர வேண்டும் என, ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. செப்., இறுதியில் போலீஸ் ஸ்டேஷனை காலி செய்து தர அறிவுறுத்தி இருந்தது. ஆனால், மாற்றிடம் ரயில்வே நிர்வாகத்தால் போலீசாருக்கு வழங்கப்படவில்லை. பார்சல் அலுவலகம் அருகே உள்ள இடத்தில், போலீஸ் ஸ்டேஷன் அமைக்க சொன்னது. ஆனால் அது சாத்தியமற்றது. எனவே வேறு இடமாக, ரயில்வே மருத்துவமனை அருகே உள்ள குடியிருப்பை, போலீஸ் ஸ்டேஷனாக மாற்றி கொடுக்க கோரியுள்ளோம்.இதற்கு ரயில்வே நிர்வாகத்தில் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. உரிய இடம் ஒதுக்காமலேயே, தற்போதுள்ள இடத்தை காலி செய்ய நோட்டீஸ் வழங்கி விட்டனர். அதற்கான கால அவகாசமும் முடிந்து பல நாட்களாகி விட்டது. நாங்கள் காலி செய்தால் கட்டுமான பணியை துவங்கி விடுவர். ரயில் பயணிகள், ரயில்வே ஊழியர்கள், குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ரயில்வே போலீசாருக்கு, ரயில்வே நிர்வாகம் இடம் வழங்காமல் மெத்தனம் காட்டி வருகிறது.இவ்வாறு கூறினர்.