தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு ஓட்டம் பிடித்த அதிகாரிகள்

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு ஓட்டம் பிடித்த அதிகாரிகள்

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு ஓட்டம் பிடித்த அதிகாரிகள்


ADDED : ஜூலை 29, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்; அந்தியூர் புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் ஆடிப்பெருந்தேர் திருவிழாவை முன்-னிட்டு, புதுப்பாளையத்திலிருந்து கெட்டிசமுத்-திரம் வரை, 1 கி.மீ., துாரத்துக்கு சாலையின் இரு-புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித்-தருமாறு, அந்தியூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் அனுப்-பினர். இதை தொடர்ந்து அந்தியூர் நெடுஞ்சா-லைத்துறை உதவி செயற்பொறியாளர் பாபு சர-வணன் தலைமையிலான சாலை பணியாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்ற நேற்று காலை வந்தனர்.

மளிகை கடை, பெட்டிக்கடை, டீக்கடை உரிமை-யாளர்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, 15க்கும் மேற்பட்டோர் புதுப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்-தியூர் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, நெடுஞ்-சாலை செயற்பொறியாளர் பாபு சரவணன் பேச்சு-வார்த்தை நடத்தினர். பிறகு மேல் அதிகாரிக-ளிடம் கூறுவதாக தெரிவித்து, ஆக்கிரமிப்பை அகற்றாமலே திரும்பி விட்டனர். ஆக்கிரமிப்பா-ளர்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்று விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us