/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திருட்டு குழாய்களை அகற்றி அதிகாரிகள் எச்சரிக்கை

ADDED : செப் 23, 2024 04:06 AM
ஈரோடு: கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திருடிய குழாய்களை அதிகாரிகள் அகற்றினர்.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் கடந்த ஆக., ௧௫ முதல், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கால்வாயில் தண்ணீர் குறைவது கண்டறியப்பட்டு நேற்று முன்தினம் நீர்வளத்துறை அதிகாரிகள், களப்பணியாளர்களுடன் தண்ணீர் செல்லும் வாய்க்காலில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கோபி தாலுகா வெள்ளாங்கோவில் அருகே மழை நீர் வடிகால் குகை வழி பாதையில், சட்டத்துக்கு புறம்பாக பி.வி.சி., குழாய் மூலம் தண்ணீர் திருட்டு நடப்பதை கண்டுபிடித்தனர். குழாய்களை அகற்றிய நிலையில், அடுத்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.