/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கஸ்துாரி அரங்கநாதருக்கு தைலக்காப்பு
/
கஸ்துாரி அரங்கநாதருக்கு தைலக்காப்பு
ADDED : ஜூலை 09, 2025 01:20 AM
ஈரோடு, ஜூலை ஈரோடு கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், தைல காப்பு, அஞ்சன காப்பு உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி மூலவருக்கு சந்தனம், தைலக்காப்பு சாத்துபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மூலவரை தரிசிக்காத வகையில் நடை சாத்தப்பட்டது.
இதுகுறித்து கோவில் பூசாரி கூறியது:
ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் பெருமாளுக்கு தைலக்காப்பு, அஞ்சனக்காப்பு உற்சவம் நடக்கும். இதன்படி நேற்றும், இன்றும் நடந்த பூஜையில் மூலவருக்கு பல்வேறு பொருட்களால் தயாரிக்கப்பட்ட தைலக்காப்பு சாத்துபடி செய்யப்பட்டது. இதில் மூலவர் சன்னிதானத்தின் உட்புறம் பச்சைக்கற்பூரம் பூசப்பட்டு நடை சாத்தப்படும். நாளை (இன்று) திருப்பாவாடை உள்ளிட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டு, மூலவருக்கு தயிர்சாதம் வைத்து நெய் அபிஷேக வழிபாடு செய்யப்படும். பின் அந்த தயிர்சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அதன் பிறகு, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் பூஜை நடக்கும். இந்த நாட்களில் உற்சவரை முழுமையாக தரிசிக்க முடியாது. தலை மற்றும் பாதத்தை தரிசிக்க முடியும். இவ்வாறு கூறினார்.

