/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாறுமாறாக வாகன ஆக்கிரமிப்பு சத்தி சாலையில் மக்கள் அவதி
/
தாறுமாறாக வாகன ஆக்கிரமிப்பு சத்தி சாலையில் மக்கள் அவதி
தாறுமாறாக வாகன ஆக்கிரமிப்பு சத்தி சாலையில் மக்கள் அவதி
தாறுமாறாக வாகன ஆக்கிரமிப்பு சத்தி சாலையில் மக்கள் அவதி
ADDED : அக் 17, 2024 01:18 AM
தாறுமாறாக வாகன ஆக்கிரமிப்பு
சத்தி சாலையில் மக்கள் அவதி
கோபி, அக். 17-
கோபி-சத்தி சாலையில், தாறுமாறாக வாகன ஆக்கிரமிப்பால், அடிக்கடி போக்கு
வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கோபி-சத்தி சாலையில், பெரியார் திடல் பஸ் ஸ்டாப் அருகே காய்கறி மார்க்கெட் உள்ளது. அங்கு வரும் மக்கள் தங்கள் டூவீலரை, மார்க்கெட் அருகே பிரதான சத்தி சாலையின் ஓரத்தில் நிறுத்தி செல்கின்றனர். அவர்களில் சிலர் தாறுமாறாக, சாலையை ஆக்கிரமித்து, தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் சீராக பயணிக்க வழியின்றி, சத்தி சாலையை நோக்கி பயணிக்கும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தி, வாகன ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாதபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்