தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்

ஈரோட்டில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்

ஈரோட்டில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்


ADDED : ஆக 27, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 03:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் கேரள வாழ் மக்கள், புத்-தாடை அணிந்து, வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் கமலாநகரில் வசிக்கும் பத்மினி என்பவரது வீட்டில், கேரள பெண்கள் ஒன்றிணைந்து ஓணம் கொண்டாடினர்.

நேற்று முன்தினம் இரவு முதலே, அத்தப்பூ கோலமிடும் பணியை துவங்கினர். கோலத்தின் நடுவில் கேரள பாரம்பரிய விளையாட்டு போட்டியான படகு போட்டியை பிரதிபலிக்கும் வகையில், தெர்மாகோலில் படகு போட்டியை தத்ரூபமாக செய்து வைத்தனர். அதை சுற்றிலும் செவ்வந்தி, செண்டுமல்லி, அரளி பூக்களை பயன்படுத்தி, கோல-மிட்டனர். பின் அதன் அருகில் கிருஷ்ணர் சிலை வைத்து, ஓணம் பாட்டு பாடி கேரள மன்னர் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்-றனர். தொடர்ந்து பூஜை அறையில் உள்ள சுவாமி படத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us