ADDED : நவ 23, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், ராசிபுரம், அணைப்பாளையம் ரயில் பாதையில், நேற்று மாலை, 45 வயது மதிக்கத்தக்க ஆண் ரயிலில் அடிப்பட்ட நிலையில் உடல் சிதைந்து இறந்து கிடந்தார்.
உடனடியாக அடையாளம் தெரியவில்லை. சேலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், இறந்தவர் சட்டை பாக்கெட்டில் பார்த்தபோது, அவர் ராசிபுரம் நகர், வரதன் தெருவை சேர்ந்த சுப்ரமணி மகன் மோகன்ராஜ், 51, என்ற பெயரில் ஓட்டுனர் உரிமம் இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

