ADDED : ஆக 22, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
பவானி:ஆப்பக்கூடல்
போலீசார் அத்தாணி அருகே ஓடைமேடு பகுதியில், நேற்று ரோந்தில்
ஈடுபட்டிருந்தனர். ஓடைமேடு பாலம் அருகில் சந்தேகத்துக்கு இடமான
வகையில் நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த அஜித், 24, என்பவரிடம்
சோதனை செய்தனர்.
அவரிடம், 90 கிராம் கஞ்சா இருந்தது. போலீசார் கைது
செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
