/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., சார்பில் தொடக்க நாள் விழா கொண்டாட்டம்
/
அ.தி.மு.க., சார்பில் தொடக்க நாள் விழா கொண்டாட்டம்
ADDED : அக் 18, 2024 02:59 AM
அ.தி.மு.க., சார்பில் தொடக்க நாள் விழா கொண்டாட்டம்
ஈரோடு, அக். 18-
அ.தி.மு.க.,வின், 53ம் ஆண்டு துவக்க விழாவை ஈரோட்டில் அக்கட்சியினர் நேற்று கொண்டாடினர். மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில், மாவட்ட கட்சி அலுவலக வளாகத்திலும், ப.செ.பூங்கா வளாகத்திலும் உள்ள எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, பாலகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஈரோடு, ஜெகநாதபுரம் காலனியில் பகுதி செயலாளர் மனோகரன் தலைமையில், முன்னாள் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி அன்னதானம் வழங்கினார்.
* அந்தியூர், தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகில், கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் கட்சி கொடியேற்றி, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்தியூர் நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் தேவராஜ், நாராயணன், செல்வன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.