/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'நவ.,1 முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு'
/
'நவ.,1 முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு'
ADDED : அக் 26, 2024 07:48 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஈரோட்டில் நேற்று நடந்தது. விவசாயிகள் தரப்பில் தெரு நாய் அதிகம் உள்ளதை கட்டுப்ப-டுத்தவும், மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கவும், கால்நடை தீவனம் தடையின்றி கிடைக்கவும் கோரினர்.
இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது:
கலெக்டர் ராஜகோபால் சுன்
கரா: நாய் பிரச்னை இந்தியா முழுவதும் உள்ளது. அனிமல் வெல்பர் போர்டு விதிகள், கட்டுப்பாடு அதிகம் என்பதால், கால்நடை துறை கூட நாய்-களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய இயலாது. இதுபற்றி பொது நல வழக்கில் தீர்ப்பு கிடைத்-தால்தான், செயல்படுத்த முடியும். மாவட்டத்தில் மாதம், 3,000க்கும் மேற்பட்ட பட்டா மாறுதல் மனு வருகிறது. 24 சதவீத மனு தள்ளுபடியாகிறது. 74 சதவீத மனுக்களுக்கு பட்டா தரப்படுகிறது. ஆன்-லைனில் பட்டா பெற விண்ணப்பம் செய்வதால், ஏதாவது காரணத்தால் தள்ளுபடியானால், உரிய காரணத்துடன் ஆர்.டி.ஓ., - டி.ஆர்.ஓ.,வுக்கு விண்-ணப்பிக்கலாம்.
ஆவின் நிறுவன அலுவலர்: ஆவின் கால்நடை தீவன ஆலைக்கு மொலாசஸ் கிடைக்காததால், நிறுத்தப்பட்டது. அமுலில் இருந்து, 340 டன் கலப்பு தீவனம் வாங்கி வினியோகித்துள்ளோம். தற்போது மொலாசஸ் கொஞ்சம் கிடைத்ததால், 60 டன் கலப்பு தீவனம் உற்பத்தி செய்துள்ளோம். விரைவில் சீராகும். பாலுக்கான, 3 ரூபாய் ஊக்-கத்தொகை கடந்த ஜூன் மாதம் வரை, 486 சங்-கங்களுக்கும் வழங்கி விட்டோம். தற்போது கிடைத்த தொகையை வைத்து, 122 சங்கத்துக்கு செப்., வரை வழங்கி உள்ளோம். அரசு நிதி வழங்-கியதும், ஊக்கத்தொகை நிலுவை முழுமையாக தரப்படும்.
நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி: கடந்-தாண்டு நெல் அறுவடையின்போது நெல் கொள்-முதல் நிலையம் திறக்கப்பட்ட அனைத்து இடங்-களிலும் இந்தாண்டும் நவ., 1 முதல் படிப்படியாக திறக்கப்படும். கூடுதல் இடங்களுக்கு தேவை அடிப்படையில் திறக்கப்படும்.
மின்வாரிய அதிகாரிகள்: அரசு விதிப்படி விவ-சாய இணைப்புக்கு, 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் தருகிறோம். இலவச மின்சாரம் கோரி-யவர்களுக்கு அரசாணை வரப்பெற்றதும் இணைப்பு தருகிறோம்.