/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரிவரதராஜ பெருமாள் கோவில் குளம் திறப்பு
/
கரிவரதராஜ பெருமாள் கோவில் குளம் திறப்பு
ADDED : டிச 21, 2024 01:37 AM
கரிவரதராஜ பெருமாள் கோவில் குளம் திறப்பு
டி.என்.பாளையம், டிச. 21-
டி.என்.பாளையத்தை அடுத்த கணக்கம்பாளையத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. பல வருடங்களாக குளம் சீரமைக்கப்படாமல் பயன்பாடின்றி இருந்தது. இந்நிலையில் அரசு சார்பில், 35.5 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி தொடங்கி வேலையும் நிறைவு பெற்றது. ஈரோட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சியில் நேற்று திறந்து வைத்தார்.
நேற்று காலை காணொலி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவில் திருக்குளத்தில் கோவில் அறங்காவலர் நரசிம்மன், உதவி ஆணையாளர் ரமணிகாந்த், செயல் அலுவலர் ஜெயப்பிரியா, சரக ஆய்வாளர் சிவமணி உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

