/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூடுதல் நாள் பாக்கு ஏலம் நடத்த கருத்து சேகரிப்பு
/
கூடுதல் நாள் பாக்கு ஏலம் நடத்த கருத்து சேகரிப்பு
ADDED : மே 24, 2025 01:10 AM
ஈரோடு, பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வெள்ளிக்கிழமை தோறும் பாக்கு ஏலம் நடக்கிறது. ஒரு ஏலத்துக்கும் அடுத்த ஏலத்துக்கும் இடையே ஆறு நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளதால், பாக்கு பழம் மற்றும் பச்சை பாக்குகாய் விற்பனையில் தொய்வு ஏற்படுவதாக விவசாயிகள் கருதினர்.
இதனால் வேறு ஒரு நாளிலும் பாக்கு காய் மற்றும் பாக்கு பழத்துக்கு மட்டும் ஏலம் நடத்த கோரிக்கை வைத்தனர். இதையேற்று எந்த நாளில் ஏலம் நடத்தலாம் என, ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் கருத்து கேட்டுள்ளனர். விவசாயிகள், வியாபாரிகள் கருத்து தெரிவித்த பின், பாக்கு பழம், பாக்கு காய்க்கு தனியாக ஒரு நாளிலும், ஆப்பி பாக்கு, சாலி பாக்கு உள்ளிட்ட அனைத்து ரக பாக்குகளுக்கும் ஏற்கனவே நடக்கும் வெள்ளிக்கிழமை ஏலம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.