/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஆர்.சி., புக் இன்றி வாகன அடமானம் பெற எதிர்ப்பு'
/
'ஆர்.சி., புக் இன்றி வாகன அடமானம் பெற எதிர்ப்பு'
ADDED : ஆக 26, 2025 01:20 AM
ஈரோடு, ஈரோடு இருசக்கர வாகன ஆட்டோ கன்சல்டிங் அசோசியேசன் தலைவர் மாரிமுத்து, செயலர் சிவராஜ், ஈரோடு மாவட்ட ஹயர் பர்சேஸ் மற்றும் பைனான்ஸ் அசோசியேசன் தலைவர் சந்தோஷ்குமார், செயலர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
டூவீலர், 4 சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்கிறோம். முறையாக ஆர்.சி., புத்தகம், ஆவணங்கள் பெற்று செயல்படுகிறோம். சில ஆண்டாக சிலர், வாகனத்தை வாங்கி கொண்டும், அதிக வட்டி பெற்று கொண்டு வாடிக்கையாளர்களை தவணை செலுத்த விடாமல், பல காரணம் கூறி வாகனத்தை விடுவிப்பதில்லை.
வாகன அடமானம் வாங்கி கொண்டு, ஆர்.சி., புத்தகம் இல்லாமல் கடன் கொடுப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.சி., புத்தகம், வாகனத்துக்கான பிற ஆவணங்களின்றி வெறும் அடமானம் பெற்று வாகனங்களை வாங்கி வைக்கக்கூடாது. இவ்வாறு கூறினர்.