/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கனவு இல்லம் திட்டத்தில்பயனாளிகளுக்கு ஆணை
/
கனவு இல்லம் திட்டத்தில்பயனாளிகளுக்கு ஆணை
ADDED : ஏப் 20, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், பயனாளிகளுக்கு பணி துவக்க ஆணை வழங்கும் நிகழ்ச்சி, அந்தியூர் யூனியன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், எண்ணமங்கலம்
, மைக்கேல்பாளையம், பர்கூர், மூங்கில்பட்டி, வேம்பத்தி, சின்னத்தம்பிபாளையம், கெட்டிசமுத்திரம் பஞ்.,களில் வசிக்கும், 360 பயனாளிகளுக்கு, வீடு கட்டுவதற்கான பணியாணை வழங்கினார். இதை தொடர்ந்து அங்கு கட்டப்பட்டு வரும், யூனியன் அலுவலக பணியை பார்வையிட்டார். நிகழ்வில் பி.டி.ஓ.,க்கள் சரவணன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

