/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'எங்கள் ஆராய்ச்சி தேசம் காக்கும் ஆய்வுகள்' டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி பெருமிதம்
/
'எங்கள் ஆராய்ச்சி தேசம் காக்கும் ஆய்வுகள்' டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி பெருமிதம்
'எங்கள் ஆராய்ச்சி தேசம் காக்கும் ஆய்வுகள்' டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி பெருமிதம்
'எங்கள் ஆராய்ச்சி தேசம் காக்கும் ஆய்வுகள்' டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி பெருமிதம்
ADDED : ஆக 06, 2025 12:59 AM
ஈரோடு, ஈரோட்டில் சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவில், நேற்று மாலை நேர அரங்கில், கோவை அமிர்த விஸ்வ வித்யாபீடம் நிகர்நிலை பல்கலை கணிதத்துறை உதவி பேராசிரியர் பிரகாஷூக்கு, இந்தாண்டுக்கான 'அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருதை' வேலுார் வி.ஐ.டி., கல்வி நிறுவன வேந்தர் விசுவநாதன் வழங்கினார்.
விழாவில் இந்திய பாதுகாப்பு துறை ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு பேசியதாவது: இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ., (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறவனம்) என்ற நிறுவனத்தில், 50 ராணுவ விஞ்ஞான கூடத்தில் ஏராளமான இளைஞர்கள் ஆராய்ச்சிகளை குவித்து வருகின்றனர். அங்கு வெறும் கப்பல், போர் விமானங்கள், ஆயுதங்கள், போர் தொழில் நுட்பங்களை மட்டும் உருவாக்கவில்லை. தேசம் காக்கும் ராணுவ வீரர்களின் பணியை எளிமையாக்குதல், மக்களின் நல்வாழ்வுக்கு பயன்படும் புதிய தொழில் நுட்பங்கள், கருவிகளை கண்டுபிடித்து வருகிறோம்.
உலகில் போர் விமானங்களின் இன்ஜின் தொழில் நுட்பம் கொண்ட, 4 தேசங்களே உள்ளன. மிக விரைவில் இந்தியா ஐந்தாவது தேசமாக உள்ளது. அதில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் நானும் ஒருவன். கொரோனா பெருந்தொற்றின்போது, ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க, ராணுவ விஞ்ஞானிகள், மூன்று மாதம் ஆராய்ச்சி செய்து, 500 மெடிக்கல் ஆக்சிஜன் பிளாண்ட் கருவிகளை உருவாக்கி, பல மாவட்டங்களுக்கும் அனுப்பி ஆக்சிஜன் தேவையை சமாளித்தது. எங்கள் ஆராய்ச்சி தேசம் காக்கும் ஆய்வுகளாக உள்ளன. புதுமையாக சிந்திப்போர், எந்த தொழிலிலும் சிறந்து செயல்படுவர். இவ்வாறு பேசினார்.
திருவிழாவில் இன்று...
இன்று மாலை நிகழ்வில், 'நெய்த நுாலும் நெய்யாத நுாலும்' என்ற தலைப்பில் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம், 'இலக்கியத்தில் உயிர் நேரம்' என்ற தலைப்பில் கவிதா ஜவகர் பேசுகின்றனர்.