ADDED : ஜூன் 25, 2026 04:29 AM
சென்னிமலை:லாரி மீது பைக் மோதிய விபத்தில், வட மாநில தொழிலாளி உயிரிழந்தார்.
உத்தரபிரதேச
மாநிலம், கோரக்பூர், பிபாரா முக்லான் பகுதியை சேர்ந்த கைலாஷ் என்பவரின்
மகன் பரத் நிஷாத், 31. இவர், திருப்பூர் வீரபாண்டி பகுதியில்
பெயின்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பரத் நிஷாத்
தனது ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் திரிபுன் என்பவரை பின்னால் அமரவைத்து,
சென்னிமலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
வெப்பிலி பிரிவு,-
அய்யம்பாளையம் சாலையில், மேற்கு வெப்பிலி ரேஷன் கடை அருகே பைக்
வந்தபோது, அங்கு சாலையோரம் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
லாரியின் பின்புறத்தில், பைக் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில்
தலையில் பலத்த காயமடைந்த பரத் நிஷாத் உடனடியாக மீட்கப்பட்டு,
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்
உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
