ADDED : மே 20, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், கடலுார் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் சுரேஷ், 32; தாராபுரத்தை அடுத்த சிக்கினாபுரம் பகுதியில் தங்கி, பனைமரங்களில் நுங்கு வெட்டும் தொழில் செய்து வந்தார். தண்ணீர்பந்தல் வலசு அருகே, ஒரு தோட்டத்தில் பனைமரத்தில் ஏறிய சு
ரேஷ் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

