/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டம்: தி.மு.க.,விடம் இயக்கம் சார்பில் முறையீடு
/
பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டம்: தி.மு.க.,விடம் இயக்கம் சார்பில் முறையீடு
பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டம்: தி.மு.க.,விடம் இயக்கம் சார்பில் முறையீடு
பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டம்: தி.மு.க.,விடம் இயக்கம் சார்பில் முறையீடு
ADDED : பிப் 14, 2024 11:16 AM
ஈரோடு: தி.மு.க., தேர்தல் அறிக்கை குழுவிடம், 'பாண்டியாறு - மோயாறு இணைப்பு இயக்கம்' சார்பில் மனு வழங்கினர்.
லோக்சபா தேர்தலுக்காக தி.மு.க., தேர்தல் அறிக்கைக்குழு எம்.பி., கனிமொழி தலைமையில் செயல்படுகிறது. அக்குழுவினரிடம் பாண்டியாறு - மோயாறு இணைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி தலைமையில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சந்தித்து மனு வழங்கினர்.
அம்மனுவில் கூறியதாவது:
நீலகிரி மலையில் உற்பத்தியாகி, கேரளாவில் நுழைந்து வீணாக அரபி கடலை நோக்கி செல்லும் பாண்டியாறு - புன்னம்புழா ஆறுகளின் நீர் வீணாகாமல் தடுக்கலாம். கடந்த பல ஆண்டு கனவு திட்டமாக செயல் வடிவம் கொடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் விளைநிலம், குடிநீராதாரம், நிலத்தடி நீர்மட்டம் பயன் பெறும்.
பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்ட வழிப்பாதையை நாங்கள் குழு அமைத்து ஆய்வு செய்து, சாத்தியக்கூறுகளை கண்டறிந்துள்ளோம். வரும் காலங்களில் மழை பொழிவு குறைந்து, தண்ணீர் தேவை உயரும் நிலையில், இதுபோன்ற இணைப்பு திட்டங்கள் விவசாயத்துக்கு மட்டுமின்றி, குடிநீர், நிலத்தடி நீராதாரத்துக்கும் பயனுடையதாக இருக்கும். இந்த இணைப்பு திட்டம் எதிர் காலத்துக்கானது என்பதால் இதை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
கோபி வடக்கு ஒன்றிய செயலாளர் கோரக்காட்டூர் ரவீந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் முத்து, மாணவரணி அமைப்பாளர் பிரவீன் உட்பட விவசாயிகள் பங்கேற்றனர்.

