/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் 19ல் படேல் நினைவு யாத்திரை
/
சென்னிமலையில் 19ல் படேல் நினைவு யாத்திரை
ADDED : நவ 15, 2025 03:05 AM
ஈரோடு: சர்தார் வல்லபபாய் படேல், 150வது நினைவு தினத்தை முன்-னிட்டு, மத்திய அரசின் 'மை பாரத் கேந்திரா' சார்பில் வரும், 19 ல் பாதயாத்திரை நடத்த உள்ளனர்.
இதுபற்றி 'மை பாரத் கேந்திரா' மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா, ஈரோட்டில் கூறியதாவது: இந்தியாவை வலுவான தேச-மாக வடிவமைத்த சர்தார் வல்லபபாய் பட்டேலின், 150ம் ஆண்டு விழாவையொட்டி அக்., 31 முதல் நவ.,25 வரை தேசிய அளவில் பட்டேலின் நினைவை கொண்டாடும் வகையில் பாத யாத்திரை மேற்கொண்டு, அவரது தேச கட்டமைப்பு செயல்-பாட்டை கொண்டு சேர்க்க நடத்தப்படுகிறது. இதன்படி சென்னி-மலை அருகே வரும், 19ம் தேதி காலை, 9:30 மணிக்கு ஹிந்-துஸ்தான் கல்லுாரியில் இருந்து பாதயாத்திரை துவங்குகிறது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, துவக்கி வைக்கிறார். இவ்-வாறு கூறினார்.

